ஐபிஎல் அரங்கில் பிராவோவை முந்திய சாஹல்…, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முதலிடம்!!

0
ஐபிஎல் அரங்கில் பிராவோவை முந்திய சாஹல்..., எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முதலிடம்!!
ஐபிஎல் அரங்கில் பிராவோவை முந்திய சாஹல்..., எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முதலிடம்!!

ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள்:

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தற்போது இறுதிக்கட்ட லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரானது, கடைசி பந்து, கூட ஆட்டத்தின் வெற்றி தோல்வியை தலைகீழாக மாற்ற கூடியதாக விறுவிறுப்பாக அரங்கேறுகிறது. இதில் குறிப்பாக, நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இது போல தான் இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஒவரில் 214 ரன்களை குவித்திருந்தது. இந்த இலக்கை துரத்திய, ஹைதராபாத் அணி கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்துல் சமது சிக்ஸர் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியில், ராஜஸ்தானின் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

IPL 2023: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போவது யார்?? வெளியான புள்ளி பட்டியல்!!

இதன் மூலம், ஐபிஎல் அரங்கில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ள டுவைன் பிராவோவின் சாதனை சமன் செய்துடன், குறைந்த இன்னிங்ஸுக்கான சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது, ஐபிஎல்லில் டுவைன் பிராவோ 161 இன்னிங்ஸில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஆனால், யுஸ்வேந்திர சாஹல் 143 இன்னிங்ஸிலேயே 183 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை தட்டி சென்றுள்ளார். இந்த பட்டியலில், பியூஷ் சாவ்லா 174, அமித் மிஸ்ரா 172, ரவிச்சந்திரன் அஸ்வின் 171 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here