இந்திய அணியை மிரட்டிய ஆஸ்திரேலிய பவுலர்…, ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து அபாரம்!!

0
இந்திய அணியை மிரட்டிய ஆஸ்திரேலிய பவுலர்..., ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து அபாரம்!!
இந்திய அணியை மிரட்டிய ஆஸ்திரேலிய பவுலர்..., ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து அபாரம்!!

இந்திய அணிக்கு எதிராக 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 3 விக்கெட்டை விழ்த்தியதன் மூலம், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியானது, இந்தூரில் 3 வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸை தொடங்கி உள்ள இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து உள்ளனர். இதனால், இந்திய அணி 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில், ஆஸ்திரேலியா சார்பாக மேத்யூ குஹ்னெமன் 4, நாதன் லியோன் 3 மற்றும் டாட் மர்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர். இந்நிலையில், ஆசியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ள வெளிநாட்டு பந்து வீச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

WPL 2023 தொடக்க விழாவில் பிரபல நடிகைகள்…, கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகும் போட்டிகள்!!

இந்த பட்டியலில், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் 128* விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னாள் வீரர் ஷேன் வார்ன் (127) சாதனையை முறியடித்துள்ளார். இவரை தொடர்ந்து, நியூசிலாந்தின் டேனியல் லூகா 98, தென் ஆப்பிரிக்காவின் டேல் வில்லியம் 92, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 82 விக்கெட்டுகளை கைப்பற்றி டாப் 5 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here