அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அசத்தல்!!

0
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அசத்தல்!!
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அசத்தல்!!

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்ததன் மூலம், சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்:

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசையில் தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில், ஆஸ்திரேலிய அணியானது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டது. அதன்படி, இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வென்று 78.57 PCT உடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, 3 வது டெஸ்ட் தொடர் நேற்று முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதத்தை கடந்துள்ளார். இவர், இந்த போட்டியில், 11 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 104 ரன்கள் அடித்தன் மூலம், டெஸ்ட் தொடரின் தனது 30 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய ஆசிய நட்சத்திரம் சிவ தாபா!!

இதனால், ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் தொடர்களில் அதிக சதம் அடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர்களுக்கான பட்டியலில் 3 வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார். இந்த பட்டியலில், ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் வாஹ் 32 சதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் ஒட்டு மொத்தமாக, 50 ஓவரில் 12, டெஸ்டில் 30 என 42 சதங்களுடன் அதிக சதம் அடித்தவர்களுக்கான சர்வதேச பட்டியலில் 13 வது இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here