யாரு பெருசுனு அடிச்சு காட்டு….,இணையத்தில் அதிக பலம் வாய்ந்த அணி இது தானாம்?

0
யாரு பெருசுனு அடிச்சு காட்டு....,இணையத்தில் அதிக பலம் வாய்ந்த அணி இது தானாம்?
யாரு பெருசுனு அடிச்சு காட்டு....,இணையத்தில் அதிக பலம் வாய்ந்த அணி இது தானாம்?

சமூக ஊடகங்களில் அதிக பலம் வாய்ந்த அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் இடங்களை பிடித்துள்ளது.

பலம் வாய்ந்த அணி

நாடு முழுவதும் IPL 2023 போட்டிகளுக்கான ஃபீவர் இப்போதே துவங்கி விட்டது. அந்த வகையில், இன்னும் ஒரு சில நாட்களில் கோலாகலமாக துவங்க இருக்கும் IPL போட்டிகளை காணுவதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, IPL போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகளில் எது பெரியது, யார் வெற்றி பெறுவார்கள் என்ற பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், வழக்கம் போல சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இடையேயான வாய்த்தகராறு சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் இணையதளங்களில் அதிக பலம் வாய்ந்த IPL அணி எதுவென்ற கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, டிவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக பலம் கிடைத்துள்ளது. இந்த அணி 9.4 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளது. இதையடுத்து மும்பை அணி 8 மில்லியன் ரசிகர்களுடன் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.., அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!!

அதே போல பெங்களூரு (6.5 மில்லியன்), கொல்கத்தா (5.1 மில்லியன்), ஹைதராபாத் (3.1 மில்லியன்) அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. ஆனால், இன்ஸ்டாகிராம் ஊடகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11.3 மில்லியன் ரசிகர்களை கொண்டு அதிக பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதற்கு பிறகு, சென்னை அணி (11.1 மில்லியன்), பெங்களூரு (10 மில்லியன்), கொல்கத்தா (3.5 மில்லியன்), டெல்லி (3.4 மில்லியன்) அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here