ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி எது தெரியுமா?? யாரும் எதிர்பாராத புள்ளி விவரம்!!

0
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி எது தெரியுமா?? யாரும் எதிர்பாராத புள்ளி விவரம்!!
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி எது தெரியுமா?? யாரும் எதிர்பாராத புள்ளி விவரம்!!

இதுவரை 15 சீசன்களை கடந்துள்ள ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசி உள்ள, அணிகளுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதிக சிக்ஸர்கள்:

இந்தியாவில் அறிமுகமான ஐபிஎல் தொடர் இதுவரை வெற்றிகரமாக 15 சீசன்களை கடந்துள்ளது. இந்த 15 சீசன்களிலும், பல வீரர்கள் தனிப்பட்ட விதத்திலும், ஓர் அணியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளனர். வரும் 31ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல்லின் 16 வது சீசனிலும் பலர் புதிய சாதனைகளை படைக்கவும், முறியடிக்கவும் தயாராகி வருகின்றன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில், தற்போது ஐபிஎல்லில் பங்குபெற உள்ள MI, CSK, RCB, RR உள்ளிட்ட 10 அணிகளில் இதுவரை எந்த அணி அதிக சிக்ஸர்களை அடித்துள்ளது என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது, 1408 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, RCB 1377, PBKS 1276 சிக்ஸர்களுடன் டாப் 3 இடத்தை பிடித்துள்ளனர்.

விவாகரத்தில் இருந்து மீண்டு வந்த சம்மு.., ஆனா அதுல இருந்து வர முடியல.., அவரே வெளியிட்ட செய்தி!

இந்த பட்டியலில், CSK அணியானது 1268 மற்றும் KKR 1226 சிக்ஸர்களுடன் 1200 க்கு மேல் சிக்ஸர்களை அடித்த அணியாக திகழ்கின்றனர். மேலும், மற்ற அணிகளான DC 1147, RR 1011, SRH 777, LSG 115 மற்றும் GT 79 சிக்ஸர்களுடன் அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதில், LSG மற்றும் GT அணிகள் தனது முதல் சீசனிலேயே அதிக சிக்ஸர்களை அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 16 வது சீசன் முடிந்த பிறகு, இந்த சிக்ஸர் பட்டியலில் அதிக மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here