ஆசிய அளவிலான அணிகள் அனைத்தும் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனை தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிட்டு வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இன்னும் 14 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலம் இவர் சர்வதேச அளவிலான மூன்று வடிவ போட்டிகளிலும் அதிக சிக்ஸர்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியல் முதலிடம் பிடிப்பார். இதுவரை 467 இன்னிங்ஸில் 539 சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியல் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்கள் விளாசி தற்போது வரை முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை அணியை அறிவித்த கணமே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நட்சத்திரம்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!!