சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா…, சர்வதேச அளவில் டாப் லிஸ்டில் நுழைந்து அசத்தல்!!

0
சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா..., சர்வதேச அளவில் டாப் லிஸ்டில் நுழைந்து அசத்தல்!!
சிக்ஸரில் சாதனை படைத்த இந்தியா..., சர்வதேச அளவில் டாப் லிஸ்டில் நுழைந்து அசத்தல்!!

கடந்த ஆண்டில், கிரிக்கெட்டை பொறுத்தவரையில் மூன்று வடிவிலும் சர்வதேச வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளனர். இந்த வகையில் தான், இந்தியாவின் 360 டிகிரி நாயகன் சூர்யகுமார் யாதவ் ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்று அசத்தினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரை தொடர்ந்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்து இந்தியாவின் ரோஹித் சர்மா, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். தற்போது வரையிலும் ரோஹித் சர்மா 182 சிக்ஸர்களுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சியில் பங்கேற்றால் மட்டுமே இந்திய அணியில் இடமா?? டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைக்கும் பிசிசிஐ!!

இதே போல, சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் கடந்த ஆண்டில் 466 சிக்ஸர்களை அடித்து சாதனை ஒன்றையும் படைத்துள்ளனர். அதாவது, கடந்த 2019ம் ஆண்டில் இந்திய அணி 309 சிக்ஸர்களை விளாசி இருந்ததை அதிகபட்ச சிக்ஸர் ரெக்கார்டாக இருந்தது. தற்போது இந்திய அணி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் அதிக சிக்ஸர்களை அடித்த சர்வதேச அணிகளில், இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்ததாக, இங்கிலாந்து 328 சிக்ஸர்கள், வெஸ்ட் இண்டீஸ் 322 சிக்ஸர்களுடன் 2 வது மற்றும் 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here