பவர் பிளேயில் முன்னிலை பெற்ற இந்தியா…, நாளை போட்டியிலும் சாதனை தொடருமா??

0
பவர் பிளேயில் முன்னிலை பெற்ற இந்தியா..., நாளை போட்டியிலும் சாதனை தொடருமா??
பவர் பிளேயில் முன்னிலை பெற்ற இந்தியா..., நாளை போட்டியிலும் சாதனை தொடருமா??

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி நாளை, இந்த வருடத்தின் முதல் ஒருநாள் போட்டியை விளையாட உள்ளது. இந்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருப்பதால், இதற்கான இந்திய அணியை தற்போது இருந்தே தயார்படுத்தும் வகையில், ஷெடுயூல்கள் உள்ளன. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் கடந்த 2020ம் ஆண்டு முதல், பவர் பிளே ஓவரில் அதிக ரன் ரேட் வைத்துள்ள அணிக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில், முதல் 10 ஓவர்கள் பவர் பிளே ஓவர் என அழைக்கப்படும். இந்த பவர் பிளே ஓவரில், 6.03 ரன் ரேட்டுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி 5.25 ரன் ரேட்டுடன் 2வது இடத்திலும், இலங்கை அணி 5.15 ரன் ரேட்டுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

“நூறாண்டுக்கு ஒரு முறை தான் இப்படி ஒரு வீரரை பார்க்க முடியும்” – கபில்தேவ் புகழாரம்!!

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா (4.98), நியூசிலாந்து (4.91), தென் ஆப்பிரிக்கா (4.90) ரன் ரேட்டுடன் டாப் 6 இடத்தில் உள்ளன. இதில், 2 வது மற்றும் 3வது இடத்தில் உள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நாளை போட்டிக்கு பிறகு, இந்த பட்டியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here