தமிழில் அதிகம் பேசப்படும் கதாபாத்திரத்தின் பட்டியல் – கண்ணம்மா ரோஷினி முதல் இடம்!!

0

தமிழகத்தில் தற்போது அதிக பிரபலமானவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபலமானவர்கள் பெயர் பட்டியல்

வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரை தான் மக்கள் மத்தியில் அதிக இடத்தை பிடித்துள்ளது. அதுவும் லாக்டவுன் சமயத்தில் இருந்தே படங்கள் எதுவுமே வெளியாகத்தால் சீரியல்களில் ரசிகர்கள் கவனத்தை திருப்ப ஆரம்பித்தனர். மேலும் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பான சீரியல்கள் என ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.

மரக்கிளைகளுக்கிடையே இருந்து எட்டிப் பார்த்து கிக்கேத்தும் கண்ணம்மா... கண்ணழகில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

புதிது புதிதாக பலவற்றை களமிறக்கியதால் ரசிகர்களுக்கு இது பெரும் பொழுதுபோக்காக அமைந்தது. இந்நிலையில் முக்கிய நிறுவனம் ஒன்று அதிக பிரபலமான கதாபாத்திரத்தின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி சீரியலில் வழக்கம் போல கண்ணம்மா கதாபாத்திரம் தான் முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் ரோஜா கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. மேலும் 4வது இடத்தை ரோஜா சீரியல் அர்ஜுன் மற்றும் 5வது இடத்தை ஜீ தமிழ் சீரியல் சத்யா பெற்றுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ் முதல் இடத்திலும் ஷிவாங்கி இரண்டாவது இடத்திலும் அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அடுத்ததாக நீயா நானா கோபிநாத் 4வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் பிரியங்கா ஸ்டார்ட் மியூசிக் மற்றும் சூப்பர் சிங்கர்க்காக 5வது இடத்தை பிடித்துள்ளார். இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here