T20யில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு ஹர்திக் பாண்டியா செய்த அநீதி…, கம்பீர் காட்டம்!!

0
T20யில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு ஹர்திக் பாண்டியா செய்த அநீதி..., கம்பீர் காட்டம்!!
T20யில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு ஹர்திக் பாண்டியா செய்த அநீதி..., கம்பீர் காட்டம்!!

இந்தியாவில் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சாஹல்:

இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. இதில், 2வது போட்டியில், இந்திய அணி கடைசி நேரத்தில் வெற்றியை உறுதி செய்து இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்தியாவின் சாஹல் 2 ஓவர்கள் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். சுழலுக்கு சாதகமான இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆரம்பத்தில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இவருக்கு தொடர்ந்து, வாய்ப்பு கொடுத்திருந்தால், நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 99 விட குறைந்த்திருக்கும் என கவுதம் கம்பீர் ஹர்திக் பாண்டியாவை சாட்டியுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி.., கண்ணீர் மல்க கேப்டன் ஷபாலி வர்மா பேட்டி!!!

இந்நிலையில், சாஹல் இந்த போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் (90), அஸ்வின் (72), பும்ரா (70) மற்றும் ஹர்திக் பாண்டியா (65) என டாப் 5 இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here