மக்களால் அதிகம் விரும்பப்படும் தமிழ் சீரியல் நடிகை – ராஜா ராணி பிரபலத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

0

இந்த ஆண்டுக்கான மக்கள் அதிகம் விரும்பும் சிறந்த சீரியல் நடிகைக்கான விருதை ராஜா ராணி தொடரில் நடித்து வரும் விஜே அர்ச்சனா பெற்றிருப்பது இவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மக்கள் புகழ் நடிகை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி 2. இதன் முதல் சீசனை போலவே 2வது சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இந்த தொடரில்,  சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா தனது குடும்பத்தின் ஆசைகளுக்காக தன்னுடைய ஐபிஎஸ் கனவை தியாகம் செய்துவிட்டு தீவிரமாக உழைத்து வருகிறார்.

இந்த தொடரில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  விஜே அர்ச்சனா. ஆலியா மானசாவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் இவர், தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளார். தற்போது இவர் இந்த ஆண்டிற்கான சிறந்த மக்கள் விரும்பும் சீரியல் நடிகை என்ற விருதை பெற்றுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பலரும்  அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here