கேட்சுகளில் சாதனை படைத்த ஐபிஎல் நட்சத்திரங்கள்…, முதலிடத்தில் CSK அணியின் சின்ன தல!!

0
கேட்சுகளில் சாதனை படைத்த ஐபிஎல் நட்சத்திரங்கள்..., முதலிடத்தில் CSK அணியின் சின்ன தல!!
கேட்சுகளில் சாதனை படைத்த ஐபிஎல் நட்சத்திரங்கள்..., முதலிடத்தில் CSK அணியின் சின்ன தல!!

ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ள வீரர்களுக்கான பட்டியலில் CSK அணியின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப் 10 வீரர்களை இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் ஒருநாள் தொடர்கள் மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த தொடர்களுக்கு பிறகு இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் 16 வது சீசனுக்கான லீக் போட்டிகள் அனைத்தும் சமீபத்தில் வெளியானதே அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள சீசன்களில் அதிக கேட்சுகளை பிடித்துள்ள வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா 109 கேட்சுகளை பிடித்து முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது சிறந்த பங்களிப்பை அளித்த கீரன் பொல்லார்ட் 103 கேட்சுகளுடன் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 97 கேட்சுகளுடன் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்…, அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப் 5 வீரர்கள் இதோ!!

இவர்களை தொடர்ந்து, விராட் கோலி 93, ஷிகர் தவான் 92, ஏபி டி வில்லியர்ஸ் 90, ரவீந்திர ஜடேஜா 88, டுவைன் பிராவோ 80, மணீஷ் பாண்டே 78 மற்றும் டேவிட் வார்னர் 74 கேட்சுகளுடன் டாப் 10 இடத்தில் உள்ளனர். எதிர்வரும் ஐபிஎல் தொடர் மூலம், இந்த பட்டியலில் அதிக மாற்றங்கள் நிகழ கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here