கடந்த சில ஆண்டுகளாக வட நாட்டில் நிலநடுக்கத்தால் பெரும்பாலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.அந்த வகையில் மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிகையை பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதாவது வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள மராக்கேஷ் பகுதியில்இருக்கும் அட்லஸ் மலைத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மர்ம முறையில் இறந்து கிடந்த 2 புலிகள்.., விளக்கம் கொடுத்த வனத்துறையினர்!!
இந்த நிலநடுக்கத்தால் பலரும் தூக்கத்தில் இருந்த போது கட்டிடங்கள் குலுங்கின. இதில் ஏராளமான வீடுகள் நொடிப்பொழுதில் உடைந்து விழுந்தன. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 2012 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்நாட்டு புவியியல் துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின் படி ரிக்டர் அளவில் 6.8-ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.