காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
morning wakeup
morning wakeup

காலை உணவு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் காலையில் சில உணவுகளை உட்கொள்ளுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். காலையில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

காலை உணவு

நாம் இரவு முழுவதும் வெறும் வயிற்றில் தூங்குவதால் நமது வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரந்திருக்கும். அந்த வேலையில் நாம் சூடான அல்லது அதிக குளிர்ச்சியான எதாவது உணவு பொருளை உண்ணும்போது அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே தான் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

குளிர் பானங்கள்:

குளிர் பானங்களை நாம் காலையில் குடிப்பதால் வயிற்றில் இரவு முழுவதும் உருவான அமிலங்களுடன் இணைந்து குமட்டல் ஏற்படும். செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சுறுசுறுப்பை இழந்து மந்தமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சிட்ரஸ் பழ சாறுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

cool drinks
cool drinks

ஏனெனில் இது வயிற்றில் அல்சர் ஏற்படுத்தும். மேலும் கொய்யாப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சேர்த்து கொள்ளவே கூடாது. இவைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

காபி

bed coffee
bed coffee

காலையில் வெறும் வயிற்றில் சூடாக பால் அல்லது காபி குடிப்பதால் இரைப்பையில் அலர்ஜியை ஏற்படுத்தும். வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து வயிற்றில் செரிமான பிரச்சனையை அதிகரிக்கும். தண்ணீர் அல்லது சாதம் வடித்த நீரை குடித்து விட்டு காபி குடிக்கலாம்.

பழங்கள்

காலையில் எழுந்தவுடன் புளிப்பு நிறைந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் புளிப்பான பழங்களில் அமிலம் அதிகம் இருக்கும்.

fruits
fruits

இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் இரைப்பை பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். இதனை அடுத்து தயிரையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.  இதனால் நமது உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here