15 லட்சத்துக்கும் மேற்பட்ட புஷ்-அப் எடுத்து உலக சாதனை

0

நாளுக்கு நாள் மக்கள் சாகசங்கள் செய்து பல செய்து சாதனை படைத்தது வரும் வேலையில் தற்போது ஒரு ஆண்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை புஷ்-அப் செய்து சாதனை படைத்துள்ளது பெரும் வைரலாகி வருகிறது.

புஷ்-அப்:

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து கின்னஸ்  உலக சாதனை செய்வது வழக்கமாக நாம் படிப்பது தான். தற்போது ஒரு ஆண்டு காலமாக புஷ்-அப் எடுத்து உலக சாதனை புரிந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த நபர் செய்த சாதனை தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி தனது புஷ் அப் பயணத்தை தொடங்கினார். அதன்படி நாளொன்று 4 ஆயிரம் புஷ் அப்களை செய்த நேட், தற்போது 15 லட்சத்து 231 புஷ் அப்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

வரும் ஜூன் 13 ஆம் தேதியுடன் தனது புஷ் அப் பயணம் நிறைவடைவதாக கூறும் நேட், இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரது நாளொன்றுக்கு 4000 புஷ் அப்களை கண்டு மிரண்டுபோயுள்ளனர் இளைஞர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here