இந்தியாவில் 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்!!

0

இந்தியாவில் இது வரை 1 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.

கொரோனா பரிசோதனை:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 7 லட்சத்தை நெருங்கி விட்டது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 4 நாடுகளுக்குள் இந்தியா இடம் பெற்றுள்ளது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. நாடு முழுவதும் பரிசோதனை வேகத்தை அதிகரிப்பதால் மட்டுமே தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி தொற்று பரவலைக் குறைக்க முடியும். எனவே கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் பணி நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் பெரிய சிக்கலாகி விடும். இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 10,004,101 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here