தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.., தகுதியானவர்கள் இவர்கள் தான்.., முழுவிபரம் உள்ளே!!

0
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.., தகுதியானவர்கள் இவர்கள் தான்.., முழுவிபரம் உள்ளே!!
தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.., தகுதியானவர்கள் இவர்கள் தான்.., முழுவிபரம் உள்ளே!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த நிலையில் அது எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை  நடக்க இருக்கும் தமிழக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த பட்ஜெட் தொடரில் பல புதிய திட்டங்கள், விவசாயிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் வலுத்து வருகிறது. இந்நிலையில் முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டுள்ளது. இதில் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதாவது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், சொந்தவீடு இல்லாமல் சரியான வருமானமும் இல்லாமல் கஷ்டப்படும் பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், கணவரை இழந்தவர்கள், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோதயா அன்ன யோஜனா ரேசன் அட்டை வைத்திருப்பவர்களும் இதற்கு ரூ.1000 பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த பட்டியல் இப்பொழுது தயாராகியுள்ள நிலையில் மகளிர் மேம்பாட்டு கழகம் அதனை ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த பணி முடிவுக்கு வர இருப்பதாகவும் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here