விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு பணி., அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!!!

0
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு பணி., அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!!!
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு பணி., அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மின்வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் எஞ்சியுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வீடுதோறும் ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல் மின் கணக்கெடுப்பு செய்யக்கூடிய பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். இதனால் மின் நுகர்வோர்க்கான மாதாந்திர மின் கட்டண முறை அமலுக்கு வர தாமதமாகி வருகிறது.

தமிழக மக்களே உஷார்.,கட்டணம் செலுத்தவில்லையெனில் இன்று இரவே Power cut ஆ? மின்வாரியம் விளக்கம்!!

இதனால் விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்பி மாதம் ஒரு முறை மின் கணக்கீடு மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தாதது போல் மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளதை பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here