வீரியம் எடுக்கும் குரங்கு அம்மை நோய்.. கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள்!

0
குமரியை தாக்கிய குரங்கு அம்மை நோய்? புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் - மக்கள் பீதி!

குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவி வருவதால் கேரளா மற்றும் டெல்லி விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய்:

கடந்த சில நாட்களாக கொரோனாவை போன்று குரங்கு அம்மை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் விளங்குகிறது. இது முதன் முதலில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது வெளிநாடுகளில் அதிகமாக பரவி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கேரளா மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை மிக தீவிரமாகப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்காக தனிப்பட்ட வார்டு வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்நோய் பத்தில் ஒருவர் உயிர் இழக்க நேரிடும் என்பதால மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here