கொரோனவை விட வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

0
கொரோனவை விட வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

பல நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய்:

இந்தியா உள்பட சில நாடுகளில் கொரோனா மீண்டும் தன் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்துள்ள நிலையில் குரங்கு அம்மை நோய் பரவுவது மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக தீவிரமாக இந்நோய் பரவி வருகிறது. இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும்.

இதனை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் படி, 57 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. மேலும் இந்த குரங்கு அம்மை நோயால் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளது மேலும் உலக மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 57 நாடுகளில் பரவிய இந்த குரங்கு அம்மை நோயால் சுமார் 6,027 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here