1 கிலோ பசுஞ்சாணம் 1.50 ரூபாய் – சத்தீஸ்கர் அரசு திட்டம்!!

0

சத்தீஸ்கரில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு கிலோ பசுஞ் சாணத்தை, விவசாயிகளிடமிருந்து, 1.50 ரூபாய்க்கு வாங்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

‘கோதான் நியாய் யோஜனா’ திட்டம்..!

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ‘கோதான் நியாய் யோஜனா’ என்ற திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பசுஞ் சாணத்தை விலைக்கு வாங்கி அவற்றின் வாயிலாக மண்புழு உரம் தயாரித்து அவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 1 கிலோ பசுஞ்சாணம் 1.50 ரூபாய்க்கு வாங்கப்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இந்த சாணத்துக்கு மாதத்துக்கு இரு முறை பணம் வழங்கப்படும் என மாநில விவசாய துறை அமைச்சர் ரவீந்திர சவுபே குழு தலைமையில் தெரிவிக்கப்பட்டது.

இத் திட்டம் குறித்து விளக்கம்..!

இந்த திட்டம் வரும் 20ம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. கால்நடைகள் திறந்தவெளிகளில் மேய்வது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பயிர்கள் நாசமாகின்றன. கட்டமைப்பு வசதி மேலும், பசுக்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால், சாலை விபத்து ஏற்பட்டு, கடும் சேதம் ஏற்படுகிறது. பசுக்கள் பால் தருவதை நிறுத்திய பின் அவற்றை உரிமையாளர்கள் அனாதையாக விட்டு விடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவு கட்டவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பசுஞ் சாணத்துக்கு விலை கிடைப்பதால், பசுக்களை கைவிட மாட்டார்கள்; சாலைகளிலும் விட மாட்டார்கள். சாணத்தை சேகரிப்பதற்காக, அவற்றை மாட்டு தொழுவத்தில் பாதுகாப்பர். இதை கருத்தில் வைத்தும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் குறித்து பா.ஜ., வினர் செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றும் சத்தீஸ்கரில் உள்ள விவசாயிகள் பசுஞ் சாணத்தை விற்க மாட்டார்கள் பசு சாணத்தை அரசு கொள்முதல் செய்தால் அவற்றை சேகரித்து வைக்க கட்டமைப்பு வசதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here