அணியில் இருந்து விலகிய பும்ரா.., மாற்று வீரரை அறிவித்த BCCI.., இனி ஆட்டம் அதிரடி தான்!!

0

இந்திய அணியில் இருந்து பும்ரா விலகியதை தொடர்ந்து மாற்று வீரர் குறித்த தகவலை BCCI வெளியிட்டுள்ளது.

IND VS SA T20

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20 தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது T20 போட்டி நாளை மறுநாள் அசாமில் அரங்கேற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள T20 உலக கோப்பை தொடரிலும் இருந்து பும்ரா விலகியுள்ளார். இந்நிலையில் பும்ரா விலகியதை தொடர்ந்து அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, சிராஜ், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி காயமடைந்த பும்ராவுக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என BCCI தெரிவித்துள்ளது.

இந்த மாற்று ஏற்பாடு தென்னாபிரிக்க தொடருக்கு மட்டும் தான் எனவும், T20 உலக கோப்பை குறித்த தகவல் வெளியாகும் என கூறியுள்ளனர். இந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் இடம்பிடித்துள்ள சிராஜ் சிறப்பாக விளையாடினால் உலக கோப்பை தொடரிலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here