“ரொனால்டோவை போல் செய்வதை நிறுத்துங்கள்”…, முகமது சிராஜுக்கு ஷமியின் அட்வைஸ்!!

0
"ரொனால்டோவை போல் செய்வதை நிறுத்துங்கள்"..., முகமது சிராஜுக்கு ஷமியின் அட்வைஸ்!!

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான, முகமது ஷமி, சிராஜுக்கு வெற்றியின் கொண்டத்தை குறித்த அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.

முகமது சிராஜ் vs ஷமி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தனது அபாரமான செயல்பாட்டால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டை கைப்பற்றி 188 ரன்களுக்குள் சுருட்டினர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த போட்டியில், இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதில், முகமது சிராஜ் முதல் விக்கெட்டை வீழ்த்தியதும், கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவை போல, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிகழ்வு போட்டி நடைபெறும் போதும் பெரும் வைரலாகியது.

“சலிப்பை ஏற்படுத்தும் ஒருநாள் தொடர்.. இந்த மாற்றங்கள் கண்டிப்பாக வேண்டும்”…, சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!!

இது குறித்து, சக மற்றும் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, சிராஜுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதாவது, நீங்கள் யாரோ ஒருவரது ரசிகராக இருப்பது நல்லது தான். ஆனால், வேகப்பந்து வீச்சாளரான நீங்கள் அவரது ஸ்டைலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here