அடேங்கப்பா.. பாகிஸ்தான் தூணையே சச்சிட்டீங்களே – அப்போ அந்த நாட்டுக்கு வெற்றி உறுதி போலயே!

0
அடேங்கப்பா.. பாகிஸ்தான் தூணையே சச்சிட்டீங்களே - அப்போ அந்த நாட்டுக்கு வெற்றி உறுதி போலயே!
அடேங்கப்பா.. பாகிஸ்தான் தூணையே சச்சிட்டீங்களே - அப்போ அந்த நாட்டுக்கு வெற்றி உறுதி போலயே!

இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதிலும் அடுத்த ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் செய்ய போவது என்ன?

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள ஆறு அணிகளும் தொடக்கத்தில் இருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதில் அதிக சிக்கலை சந்தித்துள்ள அணி என்றால் பாகிஸ்தான் அணிதான். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அணியில் உள்ள நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாஹின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதன் பிறகு ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர் நவாஸ் காயம் ஏற்பட்டது எனக் கூறி ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பல சிக்கல்களையும் தாண்டி பாகிஸ்தான் அணி கடைசியாக நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றியை தன் வசப்படுத்திக் கொண்டனர். இந்த வெற்றிக்கு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மிகப் பெரும் உதவியாக இருந்தார். அந்த போட்டியில் 57 பந்தில் 71 ரன்கள் குறித்து அரைசதம் கடந்து பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் என அனைத்து பாகிஸ்தான் ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் வெற்றி பெறுவது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனென்றால் அணியில் விளையாடி வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது காலில் ஸ்கேன் அனைத்தும் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த போட்டியில் விளையாடுவது மிகவும் கஷ்டமான செயலாக உள்ளது. இந்த செய்தி பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சூழ்நிலைகளை அனைத்தையும் தாண்டி ஆட்டத்தில் வெற்றி பெறுமா அல்லது தோல்வி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here