55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, வங்காளதேசம் இடையே ரயில்சேவை – பிரதமர் துவக்கி வைப்பு!!

0

இந்தியா – வங்காள தேசம் இடையே இருந்த ரயில் சேவை கடந்த 55 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

55 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை:

கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்­த போராட்டத்துக்கு­ பிறகு இந்­தி­யா-­கிழக்கு பாகிஸ்­தான் இடை­யி­லான ரயில் இணைப்­பு­கள் முறிந்­தன. மேற்கு வங்­காளத்தில் உள்ள கூச்பிஹார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ஹால்­தி­பரி முதல் வடக்கு பங்­ளா­தேஷ் சிலா­ஹதி வரையிலான ரயில் பாதை செய­லி­ழந்­தது. ஹால்­தி­பரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்­டத்­தில் உள்ள முக்­கி­ய­மான ரயில்­ நி­லை­யம் ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

2020 மார்ச் மாதம் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோவின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் செய்தி ஒன்றை ஹசீனாவுக்கு அனுப்பினார். மேலும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தார்கள்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது??

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி, சிலாஹதி ரயில் பாதையை இன்று தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்­த பாதை 55 ஆண்­டு­களுக்­குப் பிறகு மீண்­டும் திறக்கப்படு­கிறது. முதலில் சிலாஹதியில் இருந்து ஹால்­தி­பரி வரை ஒரு சரக்கு ரயில் இயக்­கப்­படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here