‘இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது’ – பிரதமர் மோடி பேட்டி!!

0

மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகள் நம்பியிருப்பதாகவும், கொரோனா கட்டுப்பாடு காலத்திலும் பல்வேறு தடைகளுக்கு நடுவிலும் வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன எனவும், நேரடி அந்நிய முதலீடு இந்தியாவில் அதிகரித்துள்ளது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார் .

பிரதமர் மோடி

டெல்லியிலுள்ள அசசோம் அமைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி ,” இந்தியா தனது பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவதில் சவால்களை சந்தித்து வருகின்றது. பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு அடைவது என்பதோடு அது எவ்வளவு விரைவில் எட்டப்படுகிறது என்ற கால அளவும் மிக முக்கியம் என தெரிவித்தார்.

29 நாளில் ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!!

மேலும் பேசிய அவர், இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக்க அனைத்து தொழில் துறையினரும் இணைந்து பங்காற்ற வேண்டும். மற்றுமொரு தொழில் புரட்சிக்கு உலகம் தயாராகி வரும் இந்த நேரத்தில் நாமும் நமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற நாம் நிர்ணயித்த எல்லைகளை அடைய இன்று முதல் தயாராகி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கையாள முடியாமல் தவித்த நேரத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தில் திறமையாக செயல்பட்டது. மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா மீதான உலக நாடுகளின் கருத்து மாறியுள்ளது” என்றும் கூறினார். தொடர்ந்து அவர், தன்னிறைவு இந்தியா திட்டத்தை திறம்பட செயல் படுத்துவதற்காக இந்திய அரசு உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்துவதோடு அதற்காக பல்வேறு சலுகைகளையும் வழங்கியுள்ளது. லாக்டவுன் காலத்திலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்தது.

modi speech about agricultural laws
modi speech about agricultural laws

உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கார்பரேட் நிர்வாக நடவடிக்கைகளையும், லாப பகிர்வு முறையினையும் சிறந்த முறையில் பயன்படுத்த தொழிலாளர்கள் முன்வர வேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீட்டை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும் எனவும் கூறினார். இந்திய நிறுவனமான TATA குழுமம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என்று மோடி அவர்கள் பாராட்டி பேசியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here