விஸ்வரூபமெடுத்த பிரதமரின் பாதுகாப்பு குறைவு விவகாரம் – உச்சநீதிமன்றம் விதித்த புதிய உத்தரவு!!

0
Indian-Supreme-Court

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

புதிய உத்தரவு :

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அம்மாநிலத்திற்கு சென்றார். சாலை மார்க்கமாக அவர் செல்லும், வழியில் போராட்டக்காரர்களால் 20 நிமிடத்திற்கு மேலாக தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால், ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, மோடி திரும்ப சென்றார்.

நாடெங்கும், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், உச்ச நீதிமன்றத்தின் நேரடி விசாரணைக்கு வந்தது. இது குறித்து, மாநிலத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த அனைத்து அறிக்கைகளையும் பத்திரப்படுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் NIA உள்ளிட்ட விசாரணை அமைப்புகள்  உயர்நீதிமன்ற பதிவாளருக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here