பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் பங்குபெறும் ஜி20 மாநாடு நாளை செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை முன்னிட்டு, அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், கொண்டைக்கடலை, பருப்பு, ஆப்பிள், பாதாம் மற்றும் வால்நட் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.