மோடி ஜி ..மோடி ஜி.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வரவேற்ற அமெரிக்க மக்கள் – வைரலாகும் வீடியோ!!

0
மோடி ஜி ..மோடி ஜி.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வரவேற்ற அமெரிக்க மக்கள் - வைரலாகும் வீடியோ!!
மோடி ஜி ..மோடி ஜி.. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வரவேற்ற அமெரிக்க மக்கள் - வைரலாகும் வீடியோ!!

அமெரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மிக சிறந்த வரவேற்பை அளித்துள்ளனர்.

உற்சாக வரவேற்பு:

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டு அமெரிக்காவை சென்றடைந்தார் . அமெரிக்க விமான நிலையத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும், அமெரிக்க-வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திரும்பும் திசையெங்கும் மோடி ஜி ..மோடி ஜி.. என்று குரல் எழுந்தது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மோடியை வரவேற்க காத்திருந்தனர். மழையில் நிற்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, பிரதமர் மோடியை சந்திப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அமெரிக்க வாழ் இந்திய மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். தற்போது பிரதமர் மோடியை அமெரிக்க மக்கள் வரவேற்ற வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here