1500 ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவில் தொடங்கும் மோடி – பிஎம் கேர் பணம் மூலம் திட்டம்!!!

0
1500 ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவில் தொடங்கும் மோடி - பிஎம் கேர் பணம் மூலம் திட்டம்!!!
1500 ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவில் தொடங்கும் மோடி - பிஎம் கேர் பணம் மூலம் திட்டம்!!!

கொரோனா 2வது பரவலினால் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் இல்லாமல் மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் தத்தளித்து வந்தனர். ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் இல்லாமல் மிக சிரமத்து ஆளானார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிதாக 1500 ஆக்சிஜன் ஆலைகளை ஆரம்பிக்க மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள்…

கொரோனா 2வது அலை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். இந்த நோய் இந்தமுறை அதிக வீரியம் கொண்டதாக இருந்தது. இதனால் பல லட்ச உயிர்கள் பலியானது. மருத்துவ வசய்திகள் மருந்துகள் இல்லாமல் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமல் பெரும் துயரம் அடைந்தனர். 2 வது அலையின் போது பலரும் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் தான் அதிக பேர் மரணித்தார். பின் சிகிச்சைக்காக ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் உற்பத்திகள் நிலவரங்கள் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு பற்றி மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியாவில் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள்...
இந்தியாவில் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள்…

இந்நிலையில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் 3 வது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்தியாவில் புதிதாக 1500 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளை திறக்க திட்டமிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதற்கான நிதியை பிஎம் கேர்சில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டால் நம் நாட்டிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை வரத்து. அதுமட்டுமில்லாமல் 4 லட்சம் படுக்கைளுக்கு ஆக்சிஜன் தாராளமாக ஏற்பாடு செய்யலாம் என்றும் கூறினார். இதற்கான பணிகளை மேற்கொள்வது பற்றியும் விரைவில் ஆலைகளை தொடங்குவதற்கான ஆலோசனைகள் தொடர்பாக மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக மோடியிடம் அதிகாரிகள் கூறினர்.

8000 பேருக்கு பயிற்சி..

ஆக்ஸிஜன் ஆலைகள் செய்லபட ஆரம்பித்த பின் ஆலைகள் பராமரிப்பு மற்றும் பழுது ஏற்பட்டால் பழுது நீக்க முறையான பணியாளர்கள் போன்ற அனைத்தும் சரியான முறையில் சரி செய்ய மற்றும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் இருப்பதாய் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

8000 பேருக்கு பயிற்சி..
8000 பேருக்கு பயிற்சி..

இதற்காக 8000 பேருக்கு பயிற்சி அளிக்க போகிறார்களாம் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆக்ஸிஜன் ஆலைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவே அதற்க்கு அணைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று மோடி அரசு அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here