பாலிவுட் நடிகை முதல் தோனி வரை .., கல்லூரி ஹால்  டிக்கெட்டில் ஏற்பட்ட சர்ச்சை!!

0
பாலிவுட் நடிகை முதல் தோனி வரை .., கல்லூரி ஹால்  டிக்கெட்டில் ஏற்பட்ட சர்ச்சை!!
பாலிவுட் நடிகை முதல் தோனி வரை .., கல்லூரி ஹால்  டிக்கெட்டில் ஏற்பட்ட சர்ச்சை!!

பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பிரதமர் போன்றோரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மற்ற கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் அனைத்தும் இணையத்தில் வெளியானது. இந்த ஹால் டிக்கெட்டில் ஒரு சில மாணவர்களின் புகைப்படங்களுக்கு பதில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த மாற்றத்துடன் வெளிவந்த அனைத்து ஹால் டிக்கெட்களையும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் பரப்பியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்த கல்லூரியின் பதிவாளரிடம் கேட்டபோது ஆன்லைனில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதால் ஏதோ தவறு ஏற்பட்டது. இதனால் எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரியின் பதிவாளர் கூறியுள்ளார். இந்நிலையில் சில குறும்புக்கார மாணவர்கள் இவ்வாறு புகைப்படங்களை மாற்றி பதிவேற்றம் செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்த நிகழ்வை போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன், முசாபர்பூரில் உள்ள கல்லூரியில் நடிகர் இம்ரான் ஹாச்மி, நடிகை சன்னி லியோன் உள்ளிட்டோரின் புகைப்படத்துடன் ஹால் டிக்கெட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here