பிரதமர் மோடிக்கு இன்று 71 வது பிறந்தநாள் – ‘HappyBdayModiji’ ஹேஷ்டேக்கால் களைகட்டும் ட்விட்டர்!!

0

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (17 செப்டம்பர் 2021) அவரது 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ட்விட்டரில் HappyBdayModiji, 71st Birthday, HAPPYBIRTHDAYBESTLEADER போன்ற ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

திரு. நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு நம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். அதாவது இவர் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், இந்திய பிரதம மந்திரியாக 7 ஆண்டுகளும் என தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். இவரின் இந்த 20 ஆண்டுகால அரசியல் சேவையை பாராட்டி 20 நாட்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பாஜக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

மேலும் மோடி அவர்களின் பிறந்த நாளில் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இது போக ரத்த தான முகாம், இலவச ரேஷன்பொருட்கள் வழங்குதல் போன்ற சேவைகளை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பல தலைவர்கள் மோடிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்திய மக்களும் HappyBdayModiji, 71st Birthday, HAPPYBIRTHDAYBESTLEADER, #HappyBdayNaMo போன்ற ஹேஷ்டேக்குகளில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here