தமிழகத்தில் அதிகமாகும் வினோத தீண்டாமை கொடுமைகள் – மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து பயணிக்க தடை!!

0
தமிழகத்தில் அதிகமாகும் வினோத தீண்டாமை கொடுமைகள் - மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து பயணிக்க தடை!!
தமிழகத்தில் அதிகமாகும் வினோத தீண்டாமை கொடுமைகள் - மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து பயணிக்க தடை!!

தமிழகத்தில் தேனி மாவட்டம், போடி அருகே ஒரு சமூக மாணவர்கள் மற்றொரு சமூக மாணவர்களை பேருந்தில் தங்களுக்கு சமமாக அமர்ந்து பயணிக்க கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர்.

அதிகரிக்கும் தீண்டாமை சம்பவங்கள்:

தமிழகத்தில் இந்த 20ம் நூற்றாண்டிலும், ஏராளமான இடங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளந்தாலும், நவீன தீண்டாமை என்ற பெயரில் ஆங்காங்கே,வெவ்வேறு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள், போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது தேனி மாவட்டத்தில், போடி, திருமலாபுரம் பள்ளியில் படிக்கும் டொம்புச்சேரி பகுதியை சேர்ந்த 20 க்கும் அதிகமான ஒரு குறிப்பிட்ட சமூக மாணவர்கள், சின்னமனுாரில் இருந்து குச்சனுார், டொம்புச்சேரி, பெருமாள் கவுண்டன்பட்டி வழியாக போடி செல்லும் அரசு பேருந்துகளில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் தினமும் பயணம் செய்யும் அரசு பேருந்தில், வரும் பட்டியலின பிரிவு மாணவர்களை பேருந்தின் இருக்கையில் உட்காரக்கூடாது என தகராறு செய்து உள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதையடுத்து அவர்கள் தரப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளீதரனிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் போடி பங்கஜம் பள்ளியில், CEO செந்திவேல் முருகன் தலைமையில் இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், பெருமாள் கவுண்டன்பட்டி மாணவர்கள் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதை தொடர்ந்து பேருந்தில் வேறு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று அரசு பேருந்தில் ‘வாக்கி டாக்கி’ யுடன் 2 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக அரசுக்கு உண்டு என்று பல தரப்பில் இருந்து கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here