பழனியில் அமைந்துள்ள முருகன் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருவது வழக்கம். இந்த பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்கள் போன்றவற்றை உரிய கட்டணத்துடன் பாதுகாப்பு மையங்களில் கொடுத்து விட்டு கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.