‘எனக்கு ஏற்பட்டது லேசான மயக்கமே, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டேன்’ – முக ஸ்டாலின்!!

0

சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது ஸ்டாலின் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனக்கு ஒன்றும் இல்லை நலமுடன் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தலைவர் கலைஞர் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு. கருணாநிதியின் மகன் திரு. மு.க. ஸ்டாலின். இவர் கலைஞர் மறைவுக்கு பின் திமுக கட்சியின் தலைவர் ஆனார். அக்கட்சிக்காக அயராது பாடுபடுகிறார். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்காக நலத்திட்ட உதவிகள் தனது சொந்த பணத்திலிருந்து செலவிடுகிறார். நாட்டு மக்கள் நலனுக்காக அயராது பல போராட்டங்கள் நடத்தியுள்ளார், மக்களின் நலனுக்காகவே அரசின் சட்டங்களை எதிர்த்தும் போராடுகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகளுக்காகவும் போராட்டம் நடத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நிவர், புரேவி புயல் காரணமாக ஏற்பட்ட சேதாரங்களை நேரில் சென்று பார்வையிட்டர். மேலும் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் தொண்டர்கள் மூலமும், தானும் நேரில் சென்று உதவியளிக்கிறார். தனது தந்தையின் நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் அவரது குறிக்கோள்களின் படி தனது அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் டிசம்பரில் பள்ளிகள் திறப்பு??

இப்படி போராட்டம், நலத்திட்ட உதவிகள், சமூக சேவைகள் என இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது திடீரென மயக்கம் வருவதாக கூறினார். இதனால் சென்னை கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்,” எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல் சோர்வு இருந்தது, மருத்துவர்களின் அறிவுரைப்படி BP, ECG பரிசோதனை செய்யப்பட்டது, மற்றபடி ஏதும் இல்லை. மருத்துவர் அறிவுரை படி சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here