கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

0

தமிழகத்தில் சென்னை, மதுரை  உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையாததால் அம்மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று முதலைமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பில் சென்னையை கோவை முந்தியுள்ளது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவம், காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவில்லை. இதில் கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

மேலும் இரண்டாவது அலையின் தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here