ரூ.1கோடி கொரோனா நிவாரண நிதி அளித்தார்  தமிழக ஆளுநர் பன்வாரிலால்!!!

0

கொரோனா நிவாரண பணிக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ரூ. 1 கோடி ரூபாய் வழங்கினார்.

ரூ. 1 கோடி கொரோனா நிவாரண நிதி:

இந்தியாவில் கொரோனா  2ஆம் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், தனிநபர்கள் என பலர் தங்களால் இயன்ற தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். ஸ்டாலினுடன் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர். இவர்களுடைய சந்திப்பின் காரணம் ஏதும் அதிகார பூர்வமாக வெளிவரவில்லை.

இதற்கிடையில், கொரோனா நிவாரண பணிகளுக்கு ஆளுநர் ஒரு கோடி ரூபாய் வழக்கியுள்ளார். ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here