‘ஐடி ரெய்டு மூலம் திமுகவை மத்திய அரசு வீட்டிலேயே முடக்க பார்க்கின்றனர்’ – ஸ்டாலின் கண்டனம்!!

0

திமுக தலைவரான ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானத்துறை சோதனை செய்து வரும் நிலையில் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்றும் பங்கீரங்க பேட்டி அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் இந்த வேளையில் ஒவ்வொரு கட்சி தலைவர்களும் மற்ற காட்சிகளை பற்றி குறைகூறி பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் ஒருபக்கம் எடப்பாடியை கண்டபடி பேச இந்த பக்கம் எடப்பாடி திமுகவை பற்றி கண்டபடி பேச இப்படி பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. மேலும் புது கட்சிகளான கமல் இல்லத்தரசிகளுக்கு சம்பளம், இலவச கணினி என புதுவித தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே ஸ்டாலின் வீட்டில் வருமானத்துறை சோதனை நடந்த நிலையில் தற்போது அவரது மகள் செந்தாமரை வீட்டில் வருமானத்துறை சோதனை நடந்து வருகிறது. இதற்கு திமுக கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து எழுந்துகொண்டு தான் இருப்போம். இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயப்படும் கட்சி நாங்கள் கிடையாது என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் கொந்தளித்திருந்தார். இந்நிலையில் அதிமுகவின் தோல்வி பயம் தான் இந்த நடவடிக்கை என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஸ்டாலின் ஐடி ரெய்டுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். மிசாவையே பார்த்தவன் நான், வருமானத்துறை சோதனை மூலம் திமுகவை வீட்டிலேயே முடக்கி வைக்க பார்க்கிறது மத்திய அரசு. மேலும் அதிமுகவை மிரட்டுவது போல திமுகவை மிரட்ட முடியாது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here