சென்னை ஓபன் டென்னிஸ்.., தமிழக மண்ணில் பட்டம் வென்ற செக் நாட்டு வீராங்கனை!!!

0
சென்னை ஓபன் டென்னிஸ்.., தமிழக மண்ணில் பட்டம் வென்ற செக் நாட்டு வீராங்கனை!!!

சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடருக்கான இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

சென்னை ஓபன் டென்னிஸ்

சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் முதல் முறையாக தமிழகத்தில் நடைபெற்றது. கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் நேற்று இறுதி சுற்று போட்டிகள் அரங்கேறியது. இதில் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுவை எதிர்கொண்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர்கள் இருவருக்கும் இடையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் லின்டா வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற லின்டாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், சாம்பியன் பட்டம் மற்றும் ரூ.15.73 லட்சத்தை பரிசாக வழங்கினார்.

IND VS AUS T20.., ரிஷப், தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு வாய்ப்பு?? வெளியான ப்ளெயிங் 11 விவரம்!!

இதே போன்று மற்றொரு இரட்டையர் பிரிவுக்கான பைனல் மேட்சில் லுசா ஸ்டெபானி – கேப்ரியல்லா டாப்ரோஸ்கி ஜோடி, பிளின்கோவா – நடிலா ஜாலமிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்டெபானி – கேப்ரியல்லா ஜோடி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here