‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

0

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய, மாநில அரசு குறித்து – ஸ்டாலின்..!

கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே அதில் அரசியல் செய்தே கொரோனாவை ஒழித்திடலாம் என மாநில அரசு நினைக்கிறது.

இந்தியாவில் பிரிக்கப்படும் ‘ரெட் ஷோன்’ மாவட்டங்கள் – தமிழ்நாடு முதல் இடம்.!

மத்திய, மாநில அரசுகளின் நடுவே மக்களின் வாழ்க்கை ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. நல்வாழ்வுத் துறை செயலாளர், அமைச்சர், தலைமைச் செயலாளர் மாறி மாறி கொரோனா குறித்து பேட்டி அளிக்கின்றனர்.

முதல்வருக்கு யாராவது எடுத்து கூறுங்கள் – ஸ்டாலின்..!

இன்னும் ஓரிரு நாளில் தமிழகத்தில் கொரோனாவே இருக்காது என முதல்வர் ஆரூடம் கூறியிருக்கிறார். முதல்வர் கூறிய புள்ளி விவரத்தை பார்த்தால் தமிழக மக்களை ஏமாற்றுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறும் முதல்வரை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.

தமிழகத்தில் இதுவரை 17,835 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 18,000 என்பது எத்தனை சதவீதம் என்று முதல்வருக்கு யாராவது கூற வேண்டும்.

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

பரிசோதனைகளை மேம்படுத்துங்கள்..!

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள் உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள். நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.

ஸ்டாலின் கோரிக்கை..!

அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம். மேலும் கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here