கலைஞர் பிறந்த நாளில் 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் மு.க.ஸ்டாலின் – கொண்டாட்டத்தில் மக்கள்!!

1

10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, மறைந்த திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 5 திட்டங்களை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதிரடி திட்டம்:

பல போராட்டங்களை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது திமுக அரசு. தற்போது சிறப்பாக ஆட்சி அமைத்து வருகிறது என அனைவராலும் பாரட்டப்பட்டு வந்த நிலையில் மறைந்த தமிழக திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மக்களுக்கு நலன் தரும் பல்வேறு நல திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது அதிரடியாக 5 திட்டங்களை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியுதவியான அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.8 கோடி பேருக்கு தலா ரூ.2 ஆயிரம், 14 வகையான இலவச மளிகை பொருட்கள் மற்றும் கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர்களுக்கு ரூ.25 லட்சம் உள்ளிட்ட 5 நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

14 வகையான இலவச மளிகை பொருட்கள்:

கோதுமை மாவு 1 கிலோ
உப்பு 1 கிலோ
ரவை 1 கிலோ
சர்க்கரை அரை கிலோ
உளுத்தம் பருப்பு 500 கிராம்
புளி 250 கிராம்
கடலை பருப்பு 250 கிராம்
கடுகு 100 கிராம்
சீரகம் 100 கிராம்
மஞ்சள் தூள் 100 கிராம்
மிளகாய் தூள் 100 கிராம்
டீ தூள் 2 (100 கிராம்)
குளியல் சோப்பு 1 (125 கிராம்)
துணி சோப்பு 1 (250 கிராம்)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here