தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!

0
தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் - அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!
தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் - அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தலின் போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்றி விடுங்கள் என உயர் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு:

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலின் போது, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் அவர்களால் பல தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில், மக்களின் பிரச்சனைகளை 100 நாளில் தீர்ப்பது, மகளிருக்கு பேருந்தில் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன.

தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் - அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!
தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!

இது மட்டுமல்லாமல், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது இது குறித்த சட்ட மசோதாவும், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல், ஆட்சி அமைத்த முதல் நாளில் சில முக்கிய 5 திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார். இந்த நிலையில், மீதமுள்ள திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் - அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!
தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றுங்கள் – அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!!

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதாவது, தேர்தலின் போது திமுக கொடுத்த 500 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், இந்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணைகளாக மாற வேண்டியது அவசியம் என உத்தரவிட்டார். மேலும், இதற்கான ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here