அதிக குழந்தைகள் பெற்றால் ரூ.1 லட்சம்… மாநில அமைச்சர் அறிவிப்பு!!!

0

தனது தொகுதியில் அதிக குழந்தைகளை பெற்று வாழும் பெற்றோருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மிசோரம் மாநில அமைச்சர் ரோபர்ட் ரோமாவ்யா அறிவித்துள்ளார்.

மிசோ பழங்குடியினரின் மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக மிசோரம் மந்திரி தனது தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு 1 லட்சம் ரொக்க ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அம்மாநிலத்தில் விளையாட்டு துறை அமைச்சர் ரோபர்ட் ரோமாவ்யா உலக தந்தையர் தினமான ஜூன் 20 ஆம் அறிவித்தார். மேலும் அவர் அந்த பெற்றோருக்கு  சான்றிதழ் மற்றும் கோப்பையும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை 1,091,014 ஆகும்.

குழந்தையின்மை விகிதம் மற்றும் மிசோ பழங்குடி மக்களின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது அம்மாநிலத்தில் ஒரு பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே மிசோ பழங்குடியினரின் எண்ணிக்கையை பெருகுவதற்க்காக அமைச்சர் ரோபர்ட் ரோமாவ்யா இந்த ஊக்கத்தொகையை அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here