இந்திய கிரிக்கெட் அணியின் “சிங்கப்பெண்” – மித்தாலி ராஜ் பிறந்த தினம் இன்று!!

0

வாழ்க்கையில் தான் பொழுதுபோக்காக விளையாடிய கிரிக்கெட்யை தனது வாழ்வியல் லட்சியமாக மாற்றி அதில் சாதனை செய்த இந்திய பெண்கள் அணியின் “சிங்கப்பெண்” மித்தாலி ராஜ் பிறந்த தினம் இன்று. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் அவர் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழகம் தான் தயாகம்:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கிரிக்கெட் என்பது ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அது இருபாலருக்கும் பொதுவானது. அப்படி தமிழகத்தை தாயகமாக கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முதன்மையான அதே சமயம் திறமையான வீராங்கனையாக உருவெடுத்துள்ள மித்தாலி ராஜ் பிறந்த தினம் இன்று. இவரது தந்தை துரை ராஜ் இந்திய விமானப்படையில் பணிபுரிகிறார். அவரது தாய் ராஜஸ்தான் மாநிலத்தை சேந்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மித்தாலி தனது 10 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாக கூறுகிறார். தனது சகாதாரருடன் எப்போதுமே பேட் மற்றும் பால் உடன் தான் இருப்பாராம். இது ஒரு பக்கம் இருக்க அவர் நாட்டியமும் கற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நாட்டியமா? அல்லது கிரிக்கெட்டா? என்ற நிலை வந்துள்ளது. சிறிதும் யோசிக்காமல் கிரிக்கெட்டை தேர்வு செய்துள்ளார். இவரது இந்த முடிவுகளுக்கு துணையாக இருந்தவர் அவரது தந்தை தான் என்றும் மித்தாலி குறிப்பிடுகிறார்.

இந்திய அணியில் சாதனை:

பின், படிப்படியாக தனது விடாமுயற்சி காரணமாக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரான சம்பத் குமார் என்பவரிடம் தான் மித்தாலி பயிற்சி பெற்றுள்ளார். சம்பத் குமார் மித்தாலியை இந்திய அணியில் பங்கேற்க ஏதுவாக அவரது திறமையினை மேலும் மெருகேற்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு டெஸ்ட், டி 20 போட்டிகளில் தனது அசத்தலான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அணியில் இடம் பெற்றுள்ளார்.

“தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா..” – நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய பெண்கள் அணி இரு போட்டி வரை செல்ல தனது பங்களிப்பை அளித்தவர். தற்போது வரை 21 ஆண்டுகளாக 209 ஒரு போட்டிகளில் பங்கேற்று 6888 ரன்களை குவித்துள்ளார். அவரது சாதனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here