
இந்தியாவில் அரங்கேறி வரும் ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரானது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதையடுத்து, அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் வரும் நவம்பர் 4ம் தேதி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த பரபரப்பான சூழ் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சித்திர வீரர்கள் அடுத்தடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து வருகின்றனர். அதாவது, நேற்று (நவம்பர் 1) காயங்கள் காரணமாக ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் இருந்து விலகியதையடுத்து, இன்று (நவம்பர் 2) தனிப்பட்ட காரணங்களுக்காக ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்புவதாக அறிவித்துள்ளார். இவ்வாறு வீரர்கள் விலகுவது, ஆஸ்திரேலிய அணி நெருக்கடியை ஏற்படுத்துமா என்பதே இனி வரும் போட்டிகள் மூலம் பொறுத்திருந்து பாப்போம்.
உலகக்கோப்பை 2023: அரையிறுதி வாய்ப்பை இழக்கிறதா நியூசிலாந்து? புள்ளிப் பட்டியல் சொல்வது என்ன.?