மிஸ் பட்டம் வென்ற 27 வயது அழகி திடீர் மறைவு – தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்!!

0
மிஸ் பட்டம் வென்ற 27 வயது அழகி திடீர் மறைவு - தவறான சிகிச்சையால் நேர்ந்த விபரீதம்!!

மிஸ் பிரேசில் பட்டம் வென்ற பிரபல அழகி கிளெய்சி கொரிய்யா, தொண்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

திடீரென மறைவு:

கடந்த 2018 ஆம் ஆண்டு, மிஸ் பிரேசில் பட்டம் வென்றவர் கிளெய்சி கொரிய்யா. 27 வயதான இவர், நாட்டில் ஒப்பனைக் நிபுணராக பணியாற்றி வந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன் தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்த 5 நாட்களில் இவர் உடல்நிலை நலிவுற்று, மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

இந்த நிலையில், திடீரென கடந்த திங்கட்கிழமை இவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, மருத்துவமனையின் தவறான சிகிச்சை தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பிரபல அழகி ஒருவர், தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here