
நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், உயர்கல்வி பயில்வதற்கான சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் சிறுபான்மை மாணவர்களுக்கு, KMDC மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி கடன் தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் B.Z.ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி “வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கான கடன் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் M.B.B.S. சீட் பெற்ற சிறுபான்மை மாணவர்களுக்கான கடன் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.” என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் அடுத்த 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.., வெளியான பகீர் அறிவிப்பு!!!