“தயவுசெய்து இந்த பட்டப்பெயர் வைச்சு என்னை கூப்பிடாதீங்க”., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகீர்!!!

0

தமிழகத்தில் தி.மு.க. கட்சியில் துணை முதலமைச்சர், அடுத்த தலைவர் என பல்வேறு பிம்பங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பக்கம் திரும்பி வருகிறது. மற்றொரு புறம் உதயநிதியை சின்னவர், இளைய கலைஞர், வாழும் பெரியார் எனவும் போஸ்டர் உள்ளிட்டவைகளில் கட்சி தொண்டர்கள் அழுத்தமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (பிப்.4) சென்னையில் நடைபெற்ற திமுக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இருந்தார்.

அப்போது பேசிய அவர், “என்னை தொண்டர்களும், நிர்வாகிகளும் பல்வேறு விதமான பட்டப்பெயர் வெச்சு கூப்பிடுறாங்க. அதில் எனக்கு உடன்பாடே இல்லை. என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சா போதும். அதைதான் நான் விரும்புகிறேன். எனவே தயவு செய்து இந்தப் பட்டப்பெயர்களை வைத்து கூப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.” என பரபரப்பாக பேசி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

சிவகார்த்திகேயன் நடித்த “அயலான் ” படத்தால் இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here