Friday, March 29, 2024

அமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் தான் காரணம் – அமைச்சர் பேட்டி!!

Must Read

அமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். அமராவதி ஆற்றை சுற்றி சாயப்பட்டறைகள் இல்லை எனவும் கூறினார்.

அமராவதி ஆற்றில் நுரை:

கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றில் புயல் காரணமாக ஆற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் மட்டுமல்ல நுரையும் சேர்ந்து வருகிறது. அது பற்றி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்களிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்கள் நகைச்சுவையாகவும், கோபத்தை தூண்டும் வகையிலும் இருந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அது குறித்து அவர் கூறுகையில்,” ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது, சாயக்கழிவுகளால் நுரை ஏற்படவில்லை. மேலும் அமராவதி ஆற்றை சுற்றி சாயப்பட்டறைகள் இல்லை எனவும் தெரிவித்தார்”.

முரணான பேச்சு:

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளால் ஆற்றில் நுரை வெள்ளமாக சென்ற போது மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நுரை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இவர் தற்போது கரூர் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்றும் கூறியுள்ளார்.

போலீஸ் வலையில் ஹேமந்த், தீவிர விசாரணை – சித்ரா தற்கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்!!

 

அமராவதி ஆற்றில் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் அந்த ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது எனவும், சாயக்கழிவுகளால் நுரை ஏற்படவில்லை எனும் அமைச்சர் கருப்பணனின் இந்த கருத்து பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், பலரும் இக்கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்களின் இந்த பொறுப்பற்ற பேச்சுகளால் அமைச்சர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைகிறது என விவசாயிகள் வேதனைபடுகிறார்கள். அமராவதி ஆற்றங்கரையோரத்தில் சாயப்பட்டறைகளே இல்லை என்று சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -