தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், மக்கள் அதிலிருந்து தப்பிப்பதற்காக வீடுகளில் ஏ.சி மற்றும் ஏர்கூலர் போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்டும் விதமாக அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக மின் வாரியம் தயார் செய்து தட்டுப்பாடின்றி மின் விநியோகம் செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து சென்னையில் நேற்று மட்டும் மின் நுகர்வு 3991 மெகாவாட் (84051 மி.யூனிட்டுகள்) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் மின் நுகர்வு 3991 மெகாவாட் ஆகும்.
மேலும் எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப் பட்டதால் தான் இந்த அளவுக்கு ஒரு உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி மின் தேவை 3778 மெகாவாட்டாக இருந்தது. மேலும் இதனை யூனிட் அடிப்படையில் பார்த்தால் 84.23 மில்லியன் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதே போல் நேற்று சென்னையில் மின் நுகர்வு 84.51 மி.யூனிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.